Wednesday, March 28, 2007

சிறிய ஷிர்க்கும் அதன் வகைகளும்

இஸ்லாம் அனுமதிக்காத வஸீலாக்கள் அனைத்தும் பெரிய ஷிர்க்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும். இது இபாத(வணக்க)த்தின் அந்தஸ்தை அடையாது. இதனைச் செய்தவனை அது இஸ்லாத்திலிருந்து வெளியேற்றி விடாது. எனினும் இது பெரும்பாவங்களில் அடங்கும்.

இலேசான முகஸ்துதி:- (நன்மையானவற்றைப்) படைப்புகளுக்காகச் செய்தல், அல்லாஹ்வுக்காக வணக்கத்தைப் புரிந்து அவனுக்காகவே தொழுகின்ற ஒரு முஸ்லிம் தனது வணக்கங்களையும், தொழுகையையும் மனிதர்கள் புகழ வேண்டும் என்பதற்காகச் செய்தல் போன்றவை சிறிய ஷிர்க்கில் அடங்கும். இதுபற்றி பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.

"எவன் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறானோ, அவன் நற்கருமங்களைச் செய்து, தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவானாக!" (18:110)

நபி (ஸல்) அவர்கள் சிறிய ஷிர்க்கைப் பற்ற்ப் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

'உங்களிடத்தில் நான் அதிகமாகப் பயப்படுவதெல்லாம் சிறிய ஷிர்க்காகும். அதுதான் 'ரியா' (முகஸ்துதி) மறுமைநாளில் அல்லாஹ், மனிதர்களிடத்தில் கூலியை எதிர்பார்க்கின்றவர்களை நோக்கி, 'எவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக உலகில் அமல்கள் செய்தீர்களோ, அவர்களிடமே இப்பொழுது கூலியை வாங்கிக் கொள்ளுங்கள்' என்று கூறுவான்'. ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)

அல்லாஹ் அல்லாதவர்களைக் கொண்டு சத்தியம் செய்தல்:- 'எவன்
அல்லாஹ் அல்லாதவனைக் கொண்டு சத்தியம் செய்கிறானோ, அவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவனாவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)

அல்லாஹ் அல்லாதவனைக் கொண்டு சத்தியம் செய்தல் சிலவேளை பெரிய ஷிர்க்காகிவிடும். உதாரணமாக, 'வலி'க்கு சில ஆற்றல்கள் உண்டு; அவரைக் கொண்டு பொய்ச்சத்தியம் செய்தால் சத்தியம் செய்கின்றவனுக்கு தீங்கு ஏற்படும் என்று சத்தியம் செய்யும் ஒருவன் நம்புவானென்றால் இது பெரிய ஷிர்க்காகும்.

மறைவான ஷிர்க்கு:- உதாரணத்துக்கு, அல்லாஹ்வும் இன்ன மனிதனும் நாடினால் என்று சொல்லுவது போன்று. (இவ்வாறு சொல்லுவது தடை
செய்யப்பட்டுள்ளது) அல்லாஹ் இல்லையென்றால், பின்பு இன்னவர் இல்லையென்றால் என்று சொல்வது அனுமதிக்கத் தக்கது.

'அல்லாஹ்வும் இன்னமனிதனும் நாடினால் என்று நீங்கள் கூறாதீர்கள். அல்லாஹ்வும் பின்பு இன்னமனிதனும் நாடினால் என்று சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)

இன்ஷா அல்லாஹ் தொடரும்.