Monday, April 20, 2009

மவுளூஆன ஹதீஸ்களில் அடிப்படையானவற்றிற் சில....

1. அல்லாஹ் தனது நூரி(ஒளியி)லிருந்து ஒரு பிடியை எடுத்து அதனை நோக்கி நீ முஹம்மதாக ஆகிவிடு! என்று சொன்னான்.

2. ஜாபிரே! அல்லாஹ் முதலாவதாகப் படைத்தது உனது நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் ஒளியையாகும்.

3. எனது அந்தஸ்தைக் கொண்டு நீங்கள் வஸீலாத் தேடுங்கள். (இதற்கு எந்தவித அடிப்படையுமில்லை)

4. எவனொருவன் ஹஜ் செய்து விட்டு என்னை (எனது கப்றை) ஸியாரத் செய்யவில்லையோ அவன் என்னை வெறுத்தவனாவான்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் கற்பனை செய்யப்பட்டுள்ள மேற்படி நான்கு (பொய்) ஹதீஸ்களையும் ஹாபிழ் தஹபீ (ரஹ்) அவர்கள் மவுளூஆனவை என்று கூறியுள்ளார்கள்.

5. நெருப்பு விறகைத் தின்பது போன்று, பள்ளிவாசலில் கதைப்பது நன்மைகளைத் தின்றுவிடும்.

நபியவர்கள் சொன்னதாகக் கூறப்படும் மேற்படி கற்பனை ஹதீஸுக்கு அடிப்படையே கிடையாது என்று ஹாபிழ் அல்-இறாகி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.