Thursday, March 26, 2009

சிறிய குஃப்ரும் அதன் வகைகளும்

இந்த வகை இதனைச் செய்பவனை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி விடாது.

1. (அல்லாஹ்வுடைய) அருட்கொடைகளை நிராகரித்தல்:- மூஸா (அலை) அவர்களுடைய கூட்டத்தாரை நோக்கி அல்லாஹ் கூறும் சில அம்சங்கள் இதற்கு ஆதாரமாய் அமைந்துள்ளன.

"அன்றி உங்கள் இறைவன் (பனூ இஸ்ராயீல்களை நோக்கி இதற்காக) 'நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (நான் என்னுடைய அருளைப் பின்னும்) உங்களுக்கு அதிகப்படுத்துவேன்; நீங்கள் (என்னுடைய அருளுக்கு நன்றி செலுத்தாது) மாறு செய்தால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கொடியதாக இருக்கும்' என்று அறிக்கையிட்டதையும் (நபியே!) நீர் (இவர்களுக்கு) நினைவூட்டும்" (14:7)

2. செயல் முறையில் குஃப்ர்:- குஃப்ருடைய பெயரைத் தாங்கியதாக இஸ்லாம் கூறும் ஒவ்வொரு பாவத்தையும் இது குறிக்கும். இதனைச் செய்கின்றவனிடத்தில் ஈமான் தரிபாடாக இருக்கும். பின்வரும் நபிமொழி இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

'விபசாரி விபசாரம் செய்கின்றபோது, அவன் மூஃமினல்லன்; மது அருந்துகின்றவன் மது அருந்துகின்ற போது அவனும் முஃமினல்லன்' ஆதாரம்: முஸ்லிம்

இந்தப்பிரிவு நம்பிக்கையின் அடிப்படையிலுள்ள குஃப்ருக்கு மாற்றமானதாகும். இது, இதனைச் செய்கின்றவனை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி விடாது.

3. அல்லாஹ்வுடைய தீர்ப்பு இன்னதுதான் என்பதை அறிந்து கொண்டே அதற்கு மாறாகத் தீர்ப்பளித்தல்:- இதுபற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவது பின்வருமாறு அமைந்துள்ளது.

'அல்லாஹ், அல்லாதவனுடைய எவன் அங்கீகரிக்கின்றானோ, அவன் அக்கிரம் செய்கின்றவனும் பாவியுமாவான்'. இப்னுஜரீர் (ரஹ்) அவர்களும் இதே கருத்தைக் கொண்டவர்களாவார்கள். 'இது தாழ்ந்த குஃப்ர்' என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.